28 மே, 2013

ஏர்வாடி தர்காவுக்கு சுற்றுலா வந்த வேன் கவிழ்ந்து 2 பேர் பலி

ஏர்வாடி தர்காவுக்கு சுற்றுலா வந்த வேன் கவிழ்ந்து 2 பேர் பலி


ராமநாதபுரம், மே. 28:

கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்தவர் கோபிநாத் செட்டியார் (வயது47). இவர் தலைமையில் அந்த பகுதியை சேர்ந்த 22 பேர் ஒரு வேனில் ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்காவுக்கு சுற்றுலா புறப்பட்டனர். வேனை மோகனா பிள்ளை (51) ஓட்டி வந்தார். 

இன்று அதிகாலை 5 மணி அளவில் வேன் ஏர்வாடி அருகே உள்ள இதம்பாடல் என்ற இடத்தில் வந்து கொண்டு இருந்தது. அப்போது டிரைவர் மோகனா பிள்ளை கண் அயர்ந்ததாக தெரிகிறது. இதனால் வேன் தாறுமாறாக ஓடி ரோட்டில் கவிழ்ந்தது. 

வேன் கவிழ்ந்ததில் உள்ளே இருந்தவர்கள் கூச்சல் போட்டு அலறினர். இந்த விபத்தில் டிரைவர் மோகனபிள்ளை அதே இடத்தில் உடல் நசுங்கி பலியானார். மேலும் இந்த விபத்தில் கோபிநாத் செட்டியார், ரஜினி (18), சுனில்குமார், அர்ச்சுணன் உள்பட 13 பேர் படுகாயம் அடைந்தனர். 

அவர்கள் உடனடியாக 108 ஆம்புலன் சில் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் கோபிநாத் செட்டியார் பரிதாபமாக இறந்தார். மற்றவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சிக்கல் இன்ஸ்பெக்டர்கள் துரை, மகேஸ்வரி, கீழக்கரை டி.எஸ்.பி சேர்மசேகர் ஆகியோர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு போக்குவரத்தை சீர் செய்தனர்.  
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 கருத்துகள்

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 2Day Ramnad
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top