24 ஜூன், 2013

தே.மு.தி.க.வின் சஸ்பெண்ட் எம்.எல்.ஏ.க்கள் மேல் சபை தேர்தலில் வாக்களிக்க ஐகோர்ட் அனுமதி

தே.மு.தி.க.வின் சஸ்பெண்ட் எம்.எல்.ஏ.க்கள்  

மேல் சபை தேர்தலில் வாக்களிக்க ஐகோர்ட் அனுமதி

சென்னை, ஜூன் 24:

தமிழக சட்டசபைக் கூட்டத்தொடரின்போது தே.மு.தி.க.வைச் சேர்ந்த உறுப்பினர் மைக்கேல் ராயப்பனை தாக்கியதாக அதே கட்சியைச் சேர்ந்த 


வி.சி.சந்திரகுமார், பி.பார்த்தசாரதி, டி.முருகேசன், கே.நல்லதம்பி, எஸ்.செந்தில்குமார் ஆர்.அருள்செல்வன் 

ஆகிய 6 எம்.எல்.ஏ.க்களையும் 6 மாதத்திற்கு சபாநாயகர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

இதனை எதிர்த்து 6 பேரும் தாக்கல் செய்த மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது. சபாநாயகரின் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும், அடுத்த மாதம் 27-ம் தேதி நடைபெற உள்ள மாநிலங்களவைத் தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது.

இந்த மனு இன்று தற்காலிக தலைமை நீதிபதி ராஜேஷ் குமார் அகர்வால் மற்றும் நீதிபதி எம்.சத்தியநாராயணன் கொண்ட முதல் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, சஸ்பெண்ட் செய்யப்பட்ட 6 எம்.எல்.ஏ.க்களும் மாநிலங்களவைத் தேர்தலில் வாக்களிக்க அனுமதி அளித்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

மேலும் அவர்களின் சஸ்பெண்டை ரத்து செய்யக் கோரும் வழக்கு விசாரணை ஜூலை 3-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 கருத்துகள்

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 2Day Ramnad
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top