20 ஜூலை, 2013

மு.க.ஸ்டாலின் 22-ந்தேதி பரமக்குடி வருகை: சுப.தங்கவேலன் எம்.எல்.ஏ. அறிக்கை

மு.க.ஸ்டாலின் 22-ந்தேதி பரமக்குடி வருகை

 சுப.தங்கவேலன் எம்.எல்.ஏ. அறிக்கை


பரமக்குடி, ஜூலை. 20:

தேர்தல் நிதியளிப்பு கூட்டத்தில் பங்கேற்பதற்காக, மு.க.ஸ்டாலின் 22–ந்தேதி பரமக்குடி வருகிறார்

இதுகுறித்து தி.மு.க. மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சுப.தங்கவேலன் எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளதாவது:–

பரமக்குடி ஒட்டப்பாலத்தில் தி.மு.க. சார்பில் தி.மு.க. தலைவர் கருணாநிதி பிறந்த நாள் விழா பொதுக்கூட்டமும், தேர்தல் நிதியளிப்பு கூட்டமும் வருகிற 22–ந்தேதி மாலை 6 மணிக்கு நடக்கிறது. இந்த கூட்டத்தில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.

அன்று மாலை பார்த்திபனூர் எல்லையில் மாவட்ட தி.மு.க. சார்பில் எனது (சுப.தங்கவேலன்) தலைமையில் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதில் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகளும், தொண்டர்களும், பொதுமக்களும் கலந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விழா ஏற்பாடுகளை நயினார்கோவில் ஒன்றிய செயலாளர் திவாகரன், யூனியன் தலைவர் திசைவீரன், பரமக்குடி நகர் செயலாளர் சேதுகருணாநிதி மற்றும் மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் துரைச்சாமி ஆகியோர் செய்து வருகின்றனர்.
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 கருத்துகள்

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 2Day Ramnad
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top