28 ஜூலை, 2013

புற்றுநோயால் பாதிப்பு? நடிகை கனகாவுக்கு ஆலப்புழாவில் சிகிச்சை

புற்றுநோயால் பாதிப்பு? 
நடிகை கனகாவுக்கு ஆலப்புழாவில் சிகிச்சை



திருவனந்தபுரம்: 

                       தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்த கனகா நோய் வாய்ப்பட்டு, கவனிக்க ஆளில்லாமல் ஆலப்புழாவில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் 1989ல் ராமராஜனுடன் ‘கரககாட்டக்காரன்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் கனகா. இந்தப்படம் அப்போது பட்டிதொட்டிகளில் எல்லாம் சக்கைபோடு போட்டது. 

அதன்பிறகு ரஜினி, கார்த்திக், பிரபு உள்ளிட்ட தமிழ் திரையுலகில் பல முன்னணி நடிகர்களுடன் ஏராளமான படங்களில் கதாநாயகியாக நடித்தார். 

மலையாளத்தில் மோகன் லால், மம்முட்டி, ஜெயராம் உள்பட முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்துள்ளார். 

நடிகர் முகேசுடன் இணைந்து நடித்த ‘காட் பாதர்’ என்ற மலையாள படம் 200 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது.

மலையாளத்திலும் முன்னணி நடிகையாக இருந்த இவர் தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்தார். 

கடைசியாக இவர் 2004ல் வெளிவந்த ‘குஸ்ருதி’ மலையாள படத்தில் நடித்தார். இந்நிலையில் இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்தன. 

இதற்கிடையே கனகாவிற்கு நோய்வாய்பட்டு எங்கிருக்கிறார் என்பது தெரியாமல் இருந்தது.இந்நிலையில், நடிகை கனகா தற்போது ஆலப்புழாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது தெரியவந்தது. 

கடந்த 6 மாதங்களுக்கு முன் வேறொரு மருத்துவமனையில் இருந்து ஆலப்புழா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கவனிக்க ஆளில்லாதவர்களுக்கான மருத்துவ மையத்திலும் கனகாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 கருத்துகள்

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 2Day Ramnad
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top