31 ஆகஸ்ட், 2013

ஆதார் அடையாள அட்டை எடுக்கும் பணி தொடக்கம்: 10–ந்தேதி வரை பொதுமக்களுக்கு வாய்ப்பு

ஆதார் அடையாள அட்டை எடுக்கும் பணி தொடக்கம்: 10–ந்தேதி வரை பொதுமக்களுக்கு வாய்ப்பு



சென்னை, ஆக. 31:


ஆதார் அடையாள அட்டைக்கான புகைப் படம் எடுக்கும் பணி சென்னை மாநகராட்சி பகுதியில் ஒவ்வொரு வார்டாக எடுக்கப்பட்டு வருகிறது. முகப்பேர் மேற்கு, முகப்பேர் கிழக்கு பகுதியில் நேற்று முதல் புகைப்படம் எடுக்கும்பணி தொடங்கி உள்ளது.

முகப்பேர் 91–வது வார்டு பகுதியில் எஸ்.பி.ஓ.ஏ. பள்ளி, பெண் பவுன்டேஷன் கட்டிடம், 1–வது, 2–வது, 3–வது, 7–வது பிளாக், ஊராட்சி பள்ளிகளில் புகைப்படம் எடுக்கப்படுகிறது.

முகப்பேர் மேற்கு, கிழக்கு பகுதி பொதுமக்கள், யஷ்வந்த் நகர், முகப்பேர் ஏரித் திட்டம், ரெட்டிப்பாளையம் பகுதி மக்கள் அனைவரும் இங்கு புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம். 5 வயது குழந்தை முதல் அனைவரும் புகைப்படம் எடுக்க தகுதியானவர்கள்.

இந்த முகாம் வருகிற 10–ந்தேதி வரை நடைபெறும் என்று கவுன்சிலர் பி.வி. தமிழ்ச்செல்வன் கூறினார்.

Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 கருத்துகள்

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 2Day Ramnad
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top