2 செப்டம்பர், 2013

ராம் இயக்கும் அடுத்த படத்தின் நாயகி ஆண்ட்ரியா

ராம் இயக்கும் அடுத்த படத்தின் நாயகி ஆண்ட்ரியா



‘கற்றது தமிழ்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குனராக அறிமுகமானவர் ராம். தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு இவர் இயக்கி, நடித்துள்ள ‘தங்கமீன்கள்’ படம் வெளியாகி, திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில், இவர் இயக்கவிருக்கும் அடுத்த படம் குறித்த தகவல்கள் வெளிவரத் துவங்கியுள்ளன. இவர் இயக்கப்போகும் அடுத்த படத்திற்கு ‘தரமணி’ என பெயரிட்டுள்ளனர். இப்படத்தில் வசந்த் ரவி நாயகனாகவும், ஆண்ட்ரியா நாயகியாகவும் நடிக்கின்றனர். இவருடைய படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்து வரும் யுவன் சங்கர் ராஜாவே இப்படத்திற்கும் இசையமைக்கிறார்.

ஜே.எஸ்.கே. பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பாக ஜே.சதீஷ்குமார் வழங்க, கட்டுமரம் புரொடக்ஷன்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படம் ‘சதை தாண்டி, இச்சை தாண்டி, காமம் தாண்டி சஞ்சரிக்கும் தவம் காதல்’ என்ற வாக்கியத்துடன் விளம்பரப்படுத்தப்பட்டிருக்கிறது.

‘கற்றது தமிழ்’, ‘தங்க மீன்கள்’ படங்களில் அழுத்தமான கருத்துக்களை சொன்ன ராம் இந்த படத்திலும் நல்ல கருத்தை வலியுறுத்துவார் என்றே தெரிகிறது.

Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 கருத்துகள்

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 2Day Ramnad
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top