19 அக்டோபர், 2013

இராமநாதபுரம் பகுதியில் விடிய–விடிய பலத்தமழை: மின்கம்பங்கள் சாய்ந்தன

இராமநாதபுரம் பகுதியில் விடிய–விடிய பலத்தமழை
 மின்கம்பங்கள் சாய்ந்தன


இராமநாதபுரம்:

                     இராமநாதபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு திடீர் கனமழை பெய்தது. இராமநாதபுரம் சுப்புதேவன்வலசை, அம்மன் கோவில், கேணிக்கரை, சூரங்கோட்டை, கீழக்கரை, தேவி பட்டினம் போன்ற பகுதியில் இடியுடன் பலத்த மழை கொட்டியது.

இரவு 9 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை விடிய, விடிய பெய்தது. இதனால் தாழ்வான இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கியது.

சுப்புத்தேவன் வலசை பகுதியில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் அந்த பகுதியில் இருந்த ஏராளமான மரங்கள் சாய்ந்து கீழே விழுந்தது. 9 மின்கம்பங்களும் சாய்ந்து விழுந்தது.

இதனால் அந்த பகுதி முழுவதும் மின்தடை ஏற்பட்டது. சுப்புதேவன் வலசை, அம்மன் கோவில் பகுதி இருளில் மூழ்கியது. இன்று காலை மின் ஊழியர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கீழே விழுந்த மின்கம்பங்கள் சரி செய்து, மரங்களை அப்புறப்படுத்தினர்.
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 கருத்துகள்

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 2Day Ramnad
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top