1 நவம்பர், 2013

டீசல் 60 காசு உயர்வு பெட்ரோல் விலை ரூ.1.46 குறைந்தது

டீசல் 60 காசு உயர்வு பெட்ரோல் விலை ரூ.1.46 குறைந்தது




புதுடெல்லி :
பெட்ரோல் விலை நேற்று நள்ளிரவு முதல் லிட்டருக்கு ரூ.1.46 குறைக்கப்பட்டுள்ளது. எனினும், டீசல் விலை லிட்டருக்கு 60 காசு உயர்த்தப்பட்டுள்ளது. அமெரிக்க டாலருட னான ரூபாய் மதிப்பு உயர்ந்துள்ளது. மேலும், ரூபாயின் மதிப்பு நிலையாக உள்ளது. இதற்கிடையே, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது. இதன் பலனை நுகர்வோருக்கு வழங்க பெட்ரோலிய நிறுவனங்கள் முடிவு செய்தன.

இதன்படி, சென்னையில் பெட்ரோல் விலை வாட் வரிகளுடன் சேர்ந்து ஒரு லிட்டருக்கு ரூ.1.46 குறைந்து ரூ.74.22 ஆக மாறியுள்ளது. நேற்று நள்ளிரவு முதல் இந்த விலை குறைப்பு அமலுக்கு வந்துள்ளது. கடந்த மே மாதத்தில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்பட் டது. இதைத்தொடர்ந்து 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, அக்டோபர் 1ம் தேதி லிட்டருக்கு ரூ.3.87 வரை குறைக்கப்பட்டது. தற்போது பெட்ரோல் விலை குறைந்துள்ளது.

டீசல் விலை லிட்டருக்கு 60 காசுகள் உயர்த்தப்பட்டு, ரூ.56.61 ஆக விற்பனையாகிறது. டீசல் விலையில் ஏற்படும் நஷ்டத்தை சரிகட்டுவதற்காக மாதந்தோறும் லிட்டருக்கு 50 காசுகள் உயர்த்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. இதன் அடிப்படையில் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

பெட்ரோல் விலை விவரம்

நகரங்கள்                பழைய விலை    புதிய விலை    குறைப்பு
டெல்லி                    72.40                          71.02                      1.38
கொல்கத்தா          79.51                           78.07                      1.44
மும்பை                  79.49                           78.04                       1.45
சென்னை              75.68                            74.22                       1.46

டீசல் விலை விவரம்

நகரங்கள்         பழைய விலை    புதிய விலை    உயர்வு
டெல்லி              52.54                             53.10                      0.56
கொல்கத்தா    56.90                             57.49                       0.59
மும்பை           59.46                             60.08                       0.62
சென்னை       56.01                             56.61                        0.60

(எல்லா விலைகளும் லிட்டர் / ரூபாயில்)

Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 கருத்துகள்

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 2Day Ramnad
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top