13 நவம்பர், 2013

ஹையான் புயல் பாதிப்பால் தத்தளிக்கிறது பிலிப்பைன்ஸ்

ஹையான் புயல் பாதிப்பால் தத்தளிக்கிறது பிலிப்பைன்ஸ்


தாக்லோபான்: 

பிலிப்பைன்சில் 10,000 பேரை பலிகொண்ட ஹையான் இயற்கை பேரழிவில் சிக்கியவர்களுக்கு உதவ முடியாமல் அந்நாட்டு அரசு தத்தளிக்கிறது. கடந்த வெள்ளியன்று பிலிப்பைன்ஸ் நாட்டை ஹையான் புயல் தாக்கியது. இதனால் ஏற்பட்ட சுனாமி போன்ற ராட்சத அலை களால் மக்கள் வீடு மற்றும் உடைமைகளை இழந்துள்ளனர். 

அத்தியாவசிய தேவையான உணவு, உடை, மருந்து, குடிநீர் போன்றவை கிடைக்காமல் தவிக்கின்றனர்.இதனால் உணவு பொருட்கள் விற்கும் கடைகளை திருடர்கள் சூறையாடுகின்றனர். இப்படி திருடும் கும்பலால் தாக்லோபான் நகரில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருகிறது. 

கடைகளை உடைத்து திருடும் கும்பலை கைது செய்ய போலீசாருடன் ராணுவத்தினரும் ரோந்து சுற்றிவருகின்றனர்.

நீரால் சூழ்ந்திருக்கும் உள்நாட்டின் பலபகுதிகளுக்கு மீட்பு குழுவினர் செல்ல முடியவில்லை.

இதனால் மக்கள் பலமணி நேரம் சகதி மற்றும் இடிபாடுகளில் நடந்து, உணவு மற்றும் குடிநீருக்காக மீட்பு குழுவினர் இருக்கும் இடத்தை தேடி வருகின்றனர். உணவுக்காக மக்கள் தரைமட்டமான தாக்லோபான் விமான நிலையத்தில் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். 

அத்தியாவசிய பொருட்கள் கையிருப்பு போதுமானதாக இல்லாததால் மீட்பு பணிகளில் மந்தநிலை ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் மீண்டும் மற்றொரு காற்றழுத்த தாழ்வுநிலை ஏற்பட்டுள்ளது. 

இது மத்திய மற்றும் தெற்கு பிலிப்பைன்ஸ் பகுதியில் மையம் கொண்டிருப்பதால் மீண்டும் புயல் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் மத்திய தீவுகளான போஹோல், சிபு, நெக்ரோஸ், பானாய் ஆகியவை பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மைய அதிகாரி கோனி டாடிவாஸ் தெரிவித்துள்ளார்.
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 கருத்துகள்

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 2Day Ramnad
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top