18 டிசம்பர், 2013

சர்வதேச விண்வெளி நிலைய குளிர்ச்சாதன குழாயில் உடைப்பு: உடனே சரிசெய்ய நாசா உத்தரவு

சர்வதேச விண்வெளி நிலைய குளிர்ச்சாதன குழாயில் உடைப்பு
 உடனே சரிசெய்ய நாசா உத்தரவு
 

வாஷிங்டன், டிச. 18:

உலக நாடுகளின் கூட்டு முயற்சியால் 100 பில்லியன் டாலர் மதிப்பில் கட்டப்பட்ட சர்வதேச விண்வெளி நிலையம் பூமியின் மேல் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. பூமியின் மேல் 400 கிலோ மீட்டர் தூரத்தில் செயல்பட்டு வரும் இந்த விண்வெளி நிலையமானது, பூமியைப் பற்றிய பல்வேறு அரிய தகவல்களை நமக்கு அளித்து வருகிறது.

கடந்த 11-ம் தேதி இந்த விண்வெளி நிலையத்தை குளிர்ச்சியூட்டுவதற்கான ஒரு குழாயில் உடைப்பு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதை உடனடியாக சரிசெய்வதற்கான முயற்சியில் அங்குள்ள விண்வெளி வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இருந்தும், அங்குள்ள விண்வெளி வீரர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், அந்த கோளாறை உடனடியாக சரிசெய்ய நாசா உத்தரவிட்டுள்ளது. அதன்படி, உடைப்பு ஏற்பட்டுள்ள அந்த 354 கிலோ எடையுடைய பகுதியை மாற்றியமைக்கும் பணியில் அங்குள்ள விண்வெளி வீரர்கள் ரிக் மாஸ்ட்ராச்சியோ மற்றும் மைக் ஹாப்கின்ஸ் ஆகியோர் ஈடுபட உள்ளனர்.

சர்வதேச விண்வெளி நிலையத்தின் சமான்கள் அறையில் உள்ள மற்றொரு குளிர்ச்சாதான யூனிட்டை கொண்டு அவர்கள் விண்வெளியில் மிதந்தவாறு அந்த கோளாறை சரிசெய்யவுள்ளனர். அவர்கள் கிறிஸ்துமஸ் முடிவதற்குள் மூன்று முறை விண்ணில் நடந்தவாறு இப்பிரச்சினையை சரிசெய்வார்கள் என்று நாசா தெரிவித்துள்ளது.

Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 கருத்துகள்

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 2Day Ramnad
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top